Kavithai கவிதை

... நீயாகிய நான்...

விதையாகிய நீ - விதையின்
சதையாகிய நான்...
அறமாகிய நீ - அறம்பெற
வரம்வாங்கிய நான்...
நீராகிய நீ - நீருக்குள்
ஈரமாகிய நான்...
சிலையாகிய நீ - சிலையில்
கலையாகிய நான்...
கனவாகிய நீ - கனவின்
கற்பனையாகிய நான்...

திறமான நீ - திறத்தின்
திறவான நான்...
பிறையான நீ - பிறையில்
சிறையான நான்...
சினமான நீ - சினத்தின்
சிக்கனமான நான்...
அன்பான நீ - அன்பின்
அகமான நான்...
மனமான நீ - மனதில்
மகிழ்வான நான்...
உயிரான நீ - உயிர்காக்க
ஊனான நான்...

திறவு - சாவி
ஊன்- உடல்
அறம் - உதவி

                            -கவி பிரியை