Kavithai - ஊடகஉறவு

அறியா முகங்களில் நெருக்கம்;

நெருங்கிய உறவினில் விலக்கம்...

நொடி பரவலில் தேவைகள்;

கோடி இன்னலில் பாவைகள்...

இறுக்கத்தில் பெறும் ஆறுதலாய்;

நெருடலாய் சேரும் சமூகமாறுதலால்...

உள்ளங்கை அடக்கியது உலகை;

மறந்தோம் அதிலடங்கா நம் உறவுகளை...



இன்னல்- துன்பம்     

பாவைகள் - பெண்கள்

நெருடல் - பயத்துடன் பதற்றம் 

                      -கவி பிரியை