Kavithai - பாசம்

 உதிரத்தில் இணைந்தால் 

உறவு...

உள்ளத்தில் முளைத்தால் 

நட்பு...

விதியது விதைத்தால் 

காதல்...

விளிம்பின்றி் போகும் 

செல்ல மோதல்...

எவரும் அறியா 

ஆழம்...

உலகைக் கோர்க்கும் 

பாலம்...

இலவசமாய் கிடைக்கும்

திரவியமே...

இறுக்கத்திலும் நீடித்தால் 

இறைவரமே...

                          -கவி பிரியை