தஞ்சாவூர் பெரிய கோயில்

தஞ்சாவூர் பெரிய கோயில்
காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளாக தமிழரின் பெருமையை பறைசற்றிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் சிவபெருமானுக்காக கட்டப்பட்ட மிகப்பெரிய கோயிலாகும் தமிழகத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாக உள்ளது.
தமிழரின் பாரம்பரிய சின்னமாக திகழும் தஞ்சை பெரிய கோயில் கிபி பத்தாம் நூற்றாண்டில் முதலாம் ராஜராஜனால் கட்டப்பட்டது. 1003 1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு இக்கோயிலை கட்டி முடித்தார்கள்.2010 பது ஆண்டில் தான் இக்கோயிலில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெற்றது.
தஞ்சை பெருவுடையார் கோவில் தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படுகிறது.
தொடக்கத்தில் இராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்ட கோவில் தஞ்சையை நாயக்கர்கள் ஆட்சி செய்த பொழுது தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்பட்டது.
மராட்டிய மன்னர்களால் பிரகதீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்பட்டது.

தமிழரின் கலை திறமையையும் பாரம்பரியத்தையும் தஞ்சை பெரிய கோவில் உலகிற்கு எடுத்துரைக்கிறது.
கல்வெட்டுகள் சிற்பங்கள் ஓவியங்கள் போன்றவற்றை கோவில் கட்டும் கலையில் அறிமுகப்படுத்தி ஒரு புரட்சியை ராஜராஜசோழன் ஏற்படுத்தினார்.

கோபுரம் தரை தளத்தில் இருந்து 216 அடி உயரத்தில் உள்ளது. அதன் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ள ஒரே கல்லால் ஆனது.தஞ்சை பெரிய கோவில் கோபுர கலசத்தின் நிழல் கீழே விழாதபடி கட்டப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் ஆனது இதன் உயரம் 14 மீட்டர் நீளம் 18 மீட்டர் அகலம் 3 மீட்டர் ஆகும்.

சிவலிங்கத்தின் உயரம் 12 மீட்டர் தமிழில் உயிர் எழுத்துகள் 12 சிவலிங்க பீடத்தின் உயரம் 18 மீட்டர் மெய்யெழுத்துக்கள் 18 கோபுரத்தின் உயரம் 216 உயிர்மெய் எழுத்துக்கள் 216, சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே உள்ள இடைவெளி 247 தமிழ் மொத்த எழுத்துக்கள் 247. இவ்வாறு தஞ்சை பெரிய கோவில் தமிழோடு ஒன்று இருப்பதை நாம் அறிய முடிகிறது.
பெரிய கோவில் ராஜ ராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்று 150ஆம் ஆண்டு கழித்து 1886 இல் ஜெர்மன் நாட்டின் ஷீல்ஷ் என்பவர் கூறினார். 1931இல் அங்கு வரையப்பட்ட ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டிய சிற்பங்கள் 1956இல் வெளிக்கொண்டு வரப்பட்டது. 
கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் 15 தளங்கள் கொண்ட 60 மீட்டர் உயரமான கற்கோயிலை எழுப்பியது ராஜராஜ சோழனின் பெருமையை குறிக்கிறது. 
வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து கற்களை கொண்டு வரப்பட்டு, அந்த கற்களை செதுக்கி ஒரு வடிவத்திற்கு கொண்டுவருவதற்கு 25 ஆண்டுகள் ஆயிற்று.
அஸ்திவாரம் ஆட்டம் காணாமல் இருக்க முழுக்க முழுக்க கடல் மண்ணால் நிரப்பப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான இக்கோயில் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 1954 ஏப்ரல் 11 பிரகதீஸ்வரர் ஆலய தோற்றம் பதிக்கப்பட்ட 1000 நோட்டை மத்திய அரசு வெளியிட்டது.
இதுவரை ஆறு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட பொழுது அசராமல் நிற்கிறது சோழனின் கம்பீரமாக கருதப்படும் தஞ்சை பெரிய கோவில்.
தொகுப்பு : தரணிகா