Kavithai கவிதை - மழையில் தவிக்கும் குருவி

கிழிந்த மரக்கூரை,

பொழிந்த அடைமழை...

சிலிர்த்திடும் சிறகு,

உறைந்திடும் குளிரு...


அறிவுடை மானிடமே, 

நீங்கள் பயனுறாவிடினும் 

நாங்கள் இளைப்பாற

மரங்களையேனும் மிச்சமிடுங்கள், 

இயற்கையின் எச்சங்களாய்...

                                    - கவி பிரியை ஷாலினி