![]() |
தேமல் - Themal |
தேமல் (Themal) என்பது நமது உடலில் தோல் பகுதியில் வரக்கூடிய நோய். இந்த நோய் பெரும்பாலும் யாருக்கெல்லாம் வருமென்றால் அதிகப்படியாக மாணவ விடுதி போன்ற இடங்களில் தங்கியிருப்பவர்களுக்கு வரும்.
காரணம் நாம் பயன்படுத்தும் குளியலறை சோப் மற்றும் துணிகளை நம் நண்பர்களிடம் இருந்து பகிர்ந்து கொள்வதன் மூலமாக இந்த நோய் அதிகப்படியாக ஏற்படும்.
இந்த நோய் தோலின் வெளிப்புறத்தில் வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாக காணப்படும். இது தோலின் சிறிய பகுதியில் ஆரம்பித்து பிறகு அதிகபடியானக இடங்களில் பரவுகிறது.
இந்த நோய் நமக்கு வராமல் இருப்பதற்கு நாம் முக்கியமாக செய்யவேண்டியது நம் நண்பர்களுடன் விடுதிகளில் தங்க நேரிடும் பொழுது நாம் பயன்படுத்தும் பொருட்களை தனியாக கொள்வது மிகவும் முக்கியம்.
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் இந்த நோய் ஏற்பட்டுவிட்டால் ஆரம்பக்கட்டத்திலேயே இதை சரி செய்ய முடியும்.
இதற்கு நம் தமிழ் சித்த மருத்துவத்தில் எளிதாக குணப்படுத்த மருந்து உள்ளது.
![]() |
வெற்றிலை |
இதற்கு வெற்றிலை மற்றும் பூண்டு (பெரிய வகை பூண்டு) இந்த இரண்டு பொருட்களையும் கொண்டு இந்த நோயை மிக எளிதில் குணப்படுத்த முடியும்.
![]() |
பூண்டு |
இதில் 2 வெற்றிலை மற்றும் ஒரு பூண்டுப்பல் எடுத்து அதை அரைத்து நம் குளிக்க செல்வதற்கு முன்பு தேமல் ஏற்பட்ட இடத்தில் தடவ வேண்டும், மேலும் அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
தேமல் (Themal) நமது உடலில் எவ்வளவு அளவு உள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்றார்போல் வெற்றிலை மற்றும் பூண்டு சரி சம அளவு சேர்த்துக் கொள்ளவும்.
இந்த தேமல் ஆனது ஆரம்பக்கட்டத்தில் இருந்தாள் மிக விரைவில் குணமடையும், ஒருவேளை சில நாட்களான தேமல் (Themal) நோய்க்கு இந்த மருந்தை ஒரு மாதத்திலிருந்து 48 நாள் வரை பயன்படுத்தினால் பூரணமாக குணமடையும்.
Post a Comment
Post a Comment