வயிற்று வலிக்கு மாதுளம் பழம் சிறந்த தீர்வு

இந்த வயிற்று வலி சம்பந்தமான இந்த குறிப்பு வயிற்றுவலி ஆரம்பக்கட்டத்தில் உள்ள நிலைக்கு மட்டுமே இந்த

குறிப்பு பயன்படும். வயிற்று வலி நீண்ட நாட்களாக உள்ளது என்றால் சிறந்த மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.


          வயிற்று வலி எதன் காரணமாக நமக்கு வருகிறது என்றால், பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமான காரணம் நாம் உண்ணும் உணவின் மூலமாக வயிற்று வலி ஏற்படுகிறது. உணவு உண்ணும் வழியிலும், சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருப்பதாலும் வயிற்று வலி ஏற்படுகிறது.

             காரணம் நாம் உணவை சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பதால் நமது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலமானது சுரக்கும் பொழுது நமது வயிற்றினுள் உணவு ஏதும் இல்லாமல் இருப்பதன் காரணமாக அந்த அமிலம் நமது குடல் பகுதியில் உள்ள சுவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்க ஆரம்பித்து விடுகிறது.


இதனால் குடல் பகுதியில் சிறிய சிறிய துளைகள் ஏற்பட்டு நமக்கு வலி ஏற்படுகிறது. இந்த துளைகள் மூலமாக ஏற்படும் வலிகள் நாளடைவில் நமக்கு வயிறு சம்பந்தமான பல நோய்களை ஏற்படுத்துகிறது. 


         இந்த வயிற்று வலியை குணப்படுத்த சில வழிகளை கடைபிடிப்பது அவசியம். அதில் ஒன்று தினமும் காலையில் உங்களுக்கு டீ, காபி போன்ற பானம் காலையில் குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதை இன்றிலிருந்து நிறுத்திக்கொள்ள வேண்டும்.


அதற்கு பதிலாக தண்ணீர் மட்டும் குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நமது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலமானது அதன் வீரியத்தை சற்று குறைக்க நேரிடும் இதன் காரணமாகவே வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. தண்ணீர் குடித்த பிறகு வேறு எந்த உணவையும் உட்கொள்ளலாம்.

             
             வயிற்று வலி பிரச்சினைக்கு மாதுளை பழம் ஒரு சிறந்த தீர்வு கொடுக்கிறது இந்த மாதுளம்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் ஒரு பழம் முழுவதையும் உதிர்த்து அதில் இருக்கக்கூடிய உள் தோல் பகுதியையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

மாதுளம் பழம் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்க தேவையில்லை மாதுளம் பழம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து எந்தவித உணவையும் உட்கொள்ளலாம் இதை 60லிருந்து 90 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.

மாதுளம்பழத்தை சாப்பிட ஆரம்பித்த 3 நாட்களில் இருந்து உங்களுக்கு வயிற்று வலி சிறிது சிறிதாக குறைய ஆரம்பிப்பதை நீங்கள் நன்றாக உணரலாம்.

Post a Comment