Hair Fall Tips - முடி உதிர்வை தடுக்க சில குறிப்புகள்
- முடி உதிர்வு (Hair Fall) நமக்கு எதனால் ஏற்படுகிறது என்றால் முதலில் நமது உடலிலுள்ள உஷ்ணத்தில் அளவே காரணம்.
 |
Hair fall |
- தூக்கமின்மையும் முடி உதிர்வை (Hair Fall) ஏற்படுத்தலாம். சரியான நேரத்தில் உறங்காமல் இருப்பதால் நமது உடல், மூளை அதிக அளவில் பாதிக்கிறது.
- முடி உதிர்வுக்கு (Hair Fall) மன அழுத்தமும் ஒரு முக்கியமான காரணம். அதிகமான வேலைப் பளு குடும்பச் சூழ்நிலை போன்ற காரணங்களால் உங்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பின், அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
- உங்கள் தாய், தந்தை, பாட்டி, தாத்தா போன்றோர்களின் மூலமாகவும் உங்களுக்கு முடி உதிர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது, அதாவது உங்கள் குடும்ப பரம்பரையில் யாருக்கேனும் முடி உதிர்வு, வழுக்கை போன்றவை உங்கள் குடும்பத்தினருக்கு இருந்தால் மரபனு மூலம் அது உங்களுக்கும் வாய்ப்புள்ளது.
- நீங்கள் பயன்படுத்தும் சோப், ஷாம்பூ போன்றவை வேதிப்பொருள் கலந்ததாக இருப்பின் அது உங்கள் உடலுக்கு ஏற்புடையதாக இல்லையெனில், அதன் மூலமும் உங்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்தும்.
குணமடைய நீங்கள் செய்ய வேண்டியது
- முழு நெல்லிக்காய் 10,
- மருதாணி காய் ஒரு கைப்பிடி அளவு,
- தேங்காய் எண்ணெய் (ஒரு லிட்டர்)
- விளக்கெண்ணெயை (50 ml)
 |
முழு நெல்லிக்காய் |
முதலில் முழு நெல்லிக்காய், மருதாணி காய் எடுத்துக்கொண்டு இரண்டையும் சேர்த்து இடித்து பொடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்,
 |
மருதாணி காய் |
அதை சுத்தமான தேங்காய் எண்ணெயில் (ஒரு லிட்டர்) இடித்து வைக்கப்பட்ட முழு நெல்லிக்காய், மருதாணி காய் பொடியை, ஏழு நாட்களுக்கு ஊறவைத்து,
 |
தேங்காய் எண்ணெய் |
அதை தேங்காய் எண்ணையை மட்டும் வடிகட்டி அதில் 50 ml விளக்கெண்ணெயை கலந்து பயன்படுத்த வேண்டும்.
 |
விளக்கெண்ணெயை
|
இவ்வாறு இந்த எண்ணையை 20 தில் இருந்து 30 நாட்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு சிறப்பான மாற்றம் தரும், பயன்படுத்தி மகிழுங்கள்.